மிகச்சிறந்த ஆட்சி... முதல் இரு இடங்களில் கேரளா, தமிழ்நாடு!- கடைசி இடத்துக்கு போராடும் உ.பி

0 11230

நாட்டிலேயே மிகச்சிறந்த ஆட்சி நடைபெறும் பெரிய மாநிலங்கள் பட்டியலில் கேரளா முதலிடத்தையும் , தமிழகம் இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளன. உத்தரபிரதேசம் கடைசி இடத்தை பெற்றுள்ளது.

இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான Public Affairs மையம் என்ற அமைப்பின் ஆண்டறிக்கையில் தென்மாநிலங்களில் சிறப்பான ஆட்சி நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு 1.388 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு 0.912 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை பெற்றிருக்கிறது. அடுத்த இடத்தை ஜெகன்மோகன் தலைமையிலான ஆந்திர அரசு 0.531 புள்ளிகளுடனும் எடியூரப்பா தலைமையிலான கர்நாடக அரசு 0.468 புள்ளிகளுடன் பிடித்துள்ளன.

கடைசி இடங்களில் உத்தரபிரதேசம், ஒடிஸா, பிகார் மாநிலங்கள் உள்ளன. சிறந்த ஆட்சி நடைபெறும் சிறிய மாநிலங்கள் பட்டியலில் கோவா முதலிடத்தை பெற்றுள்ளது. மேகலாயா, ஹிமாச்சல பிரதேசம் அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளன. மோசமான ஆட்சி நடைபெறும் மாநிலங்கள் பட்டியலில் டெல்லியும் இடம் பெற்றுள்ளது. யூனியன் பிரதேசங்களில் சண்டிகர் முதலிடத்தையும் புதுச்சேரி இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளன. ஒரு மாநிலத்தின் சமமான வளர்ச்சி, நிலையான வளர்ச்சி ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இந்த பட்டியல் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments