ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் காலாண்டு நிகர லாபம் 15 விழுக்காடு சரிவு

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் காலாண்டு நிகர லாபம் 15 விழுக்காடு சரிவு
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிகர லாபம் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் 15 விழுக்காடு சரிந்துள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான இரண்டாவது காலாண்டுக்கான லாப நட்டக் கணக்கைப் பங்குச்சந்தையில் ஒப்படைத்துள்ளது. அதில் ஒன்பதாயிரத்து 567 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
முந்தைய ஆண்டின் இதே காலக்கட்டத்தில் 11 ஆயிரத்து 262 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டியிருந்தது. கொரோனா சூழலில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டதால் எட்டாயிரத்து 548 கோடி ரூபாய் நிகர லாபம் கிடைக்கும் எனக் கணிக்கப்பட்டது. இந்நிலையில் கணிப்பை விட ஆயிரம் கோடி ரூபாய் அதிகமாக நிகர லாபம் ஈட்டியுள்ளது.
Comments