ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது ... ஒரு ஆண்டுக்குள் விமானப்படையில் இணைகிறது ருத்ரம்!

0 5470

எதிரிகளின் ரேடார் அமைப்புகளை கண்டறிந்து தாக்கி அழிக்கும் ருத்ரம் ஏவுகணை 2022 - ஆம் ஆண்டு இந்திய விமானப்படையில் இணைக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த அக்டோபர் 9 - ஆம் தேதி ஒடிசாவின் பல்சோர் தீவு கடற்கரை பகுதியில் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட ரேடார்களை கண்டறிந்து தாக்கும் ருத்ரம் ஏவுகணை சுகோய் ரக போர் விமானத்திலிருந்து வெற்றிக்கரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டது. எதிரி நாடுகளின் ரேடார் அமைப்புகளை கண்டறிந்து துல்லியமாக தாக்கி துவம்சம் செய்யும் திறன் கொண்ட ருத்ரம் ஏவுகணை ஒலியை விட 2 மடங்கு வேகத்தில் செல்லக் கூடியது. கதிர் வீச்சு தென்பட்டால், ருத்ரம், ருத்ரதாண்டவம் ஆடி விடும். சுமார் 250 கிலோ மீட்டர் தொலைவுக்குள் கதிர் வீச்சை கண்டறிந்து தாக்கும் திறன் கொண்ட ருத்ரம் இலக்கை செட் செய்து விட்டால், ரேடார்கள் அணைத்தாலும் தப்பித்து விட முடியாது.

இந்தியாவின் ரேடார்களை தாக்கி அழிக்கும் திறன் கொண்ட முதல் சூப்பர்சோனிக் ஏவுகணை ருத்ரம் என்பதும் குறிப்பிடத்தக்கது. எதிரி நாடுகளின் மீது விமானப்படை போர் விமானங்கள் தாக்குதல் நடத்துவதற்கு முன், ருத்ரத்தை ஏவி விட்டால் அவர்களின் ரேடார்கள் அழிக்கப்பட்டு விடும். இடைப்பட்ட சமயத்தில் எதிரி நாடுகளின் இலக்குகளை இந்திய போர் விமானங்களால் துல்லியமாக தாக்க முடியும்.

தற்போது வரும் 2022 - ஆம் ஆண்டுக்குள் விமானப்படையில் ருத்ரத்தை இணைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்னும் 6,7 பரிசோதனைகள் செய்து பார்த்த பிறகு ருத்ரம் விமானப்படையில் இணைக்கப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த ஏவுகணையில் பொருத்தப்பட்டுள்ள ஸ்க்ரம்ஜெட் இன்ஜீன்கள் மூலம் இயங்குகிறது. இலக்கை செட் செய்த பிறகும் இலக்கை மாற்றிக் கொள்ள முடியும். ஐதராபாத்திலுள்ள இந்திய ராணுவ ஆராய்ச்சிக்கழகம் ருத்ரம் ஏவுகணையை தயாரித்துள்ளது. இந்திய விமானப்படையில் ருத்ரம் இணைக்கப்பட்டு விட்டால், மிகப் பெரிய பலமாக அமையும்,

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments