வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் காலிறுதிச் சுற்று: உலகின் நம்.1 வீரரான ஜோகோவிச் அதிர்ச்சித் தோல்வி

0 505
வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் காலிறுதிச் சுற்று: உலகின் நம்.1 வீரரான ஜோகோவிச் அதிர்ச்சித் தோல்வி

வியன்னா ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதிப் போட்டியில், உலகின் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

இத்தாலியை சேர்ந்த இளம் வீரரான லொரென்சோ சொனெகோவை, ஜோகோவிச் எதிர்கொண்டார். போட்டியின் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய லொரென்சோ, 6-2, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வென்று, ஜோகோவிச்சிற்கு அதிர்ச்சி அளித்தார்.

மற்றொரு போட்டியில் நடப்பு சாம்பியனான டொமினிக் தீமை, ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லே எதிர்கொண்டார். 7-6, 6-2 என்ற செட் கணக்கில் டொமினிக் தீமை வென்ற ரூப்லே அரையிறுதிக்கு முன்னேறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments