மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க ஆளுநர் ஒப்புதல்

மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க ஆளுநர் ஒப்புதல்
எம்பிபிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
இதன் மூலம், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணாக்கர்கள் 300-க்கும் மேற்பட்டோருக்கு, மருத்துவப் படிப்பிற்கான வாய்ப்பு உறுதியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே நேற்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உள் ஒதுக்கீடு சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் தந்தமைக்காக ஆளுநருக்கு நன்றி தெரிவித்தார்.
Comments