குஜராத்தில் 17 புதிய திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் மோடி..!

0 938
குஜராத்தில் 17 புதிய திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் மோடி..!

குஜராத் மாநிலம் கெவடியாவில் 17 புதிய திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் மோடி,  படகு சவாரி செய்ததுடன் மூலிகைப் பூங்கா, உயிரியல் பூங்கா ஆகியவற்றையும் பார்வையிட்டார்.

இரண்டு நாள் பயணமாக குஜராத் மாநிலத்திற்கு சென்றுள்ள பிரதமர் மோடி, நர்மதா மாவட்டம் கெவடியாவில் சர்தார் சரோவர் அணைப் பகுதியில் பல்வேறு திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தார்.

ஆரோக்யா வன் எனப்படும் மூலிகைப் பூங்காவை பிரதமர் மோடி திறந்துவைத்துப் பார்வையிட்டார். நூற்றுக்கணக்கான மருத்துவப் பயன்பாட்டிற்குரிய தாவரங்கள் மற்றும் மூலிகைகள் 15 ஏக்கர் பரப்பளவுள்ள இந்த பூங்காவில் வைக்கப்பட்டுள்ளன.

சர்தார் படேல் உயிரியல் பூங்காவைத் திறந்து வைத்தபின், பேட்டரி காரில் சென்று பார்வையிட்டார். பூங்காவிற்கு 1,100 பறவைகள் மற்றும் விலங்குகள் கொண்டுவரப்பட்டுள்ளன. 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மரங்கள் இங்கு பராமரிக்கப்படுகின்றன.

பூங்காவில் பறவைகள் கூண்டைத் திறந்து வைத்த பிரதமர், கிளிகளைப் பறக்கவிட்டார். அப்போது தமது கைகளின்மீது வைக்கப்பட்ட இரண்டு கிளிகளைக் கண்டு மகிழ்ந்தார்.

பறவைகளை ரசிப்போருக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும் என்றும், கெவாடியாவில் உள்ள இந்தக் கூண்டு மிகச் சிறந்த கற்றல் அனுபவமாக இருக்கும் என்றும் ட்விட்டர் பதிவில் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

படேல் சிலைக்கான படகுப் போக்குவரத்தை தொடங்கிவைத்த பிரதமர் மோடி, படகில் பயணம் மேற்கொண்டார். சர்தார் சரோவர் அணைப் பகுதியில், வண்ண விளக்குகளால் மின்னும் காட்சிகளை பிரதமர் தொடங்கிவைத்தார். பல வண்ணங்களுடன் காட்சியளிக்கும் கற்றாழைத் தோட்டம் பார்வையாளர்களுக்கு விருந்து படைப்பதாக அமைந்துள்ளது.

ஒற்றுமையின் சிலைக்கான இணையதளத்தையும், கெவாடியா மொபைல் செயலியையும் பிரதமர் தொடங்கிவைத்தார். கண்கவர் தோட்டத்தை பார்வையிட்டு, இரவு நேரத்தில் மின்னும் விளக்குகளை பிரதமர் கண்டுகளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments