டெல்லியில் மீண்டும் புதிய உச்சத்தை எட்டிய கொரோனா பாதிப்பு

0 1487
டெல்லியில் மீண்டும் புதிய உச்சத்தை எட்டிய கொரோனா பாதிப்பு

டெல்லியில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நேற்றைய பாதிப்பு மீண்டும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

அதன்படி, நேற்று ஒரே நாளில் 5,891 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 80 ஆயிரத்தை கடந்துள்ளது.

மேலும், 47 பேர் உயிரிழந்ததால்,பலியானவர்களின் எண்ணிக்கை 6,470 ஆக அதிகரித்துள்ளது.

டெல்லி அரசின் தீவிர நடவடிக்கைகளுக்குப் பிறகு பாதிப்பு குறைந்திருந்த நிலையில், கடந்த சில தினங்களாக சராசியாக 5 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments