ஆன்லைன் வகுப்பில் இருந்த மாணவியை ஏமாற்றி 2-வது திருமணம்..! 43-வயது நபரை கைது செய்த போலீசார்

0 7431
ஆன்லைன் வகுப்பில் இருந்த மாணவியை ஏமாற்றி 2-வது திருமணம்..! 43-வயது நபரை கைது செய்த போலீசார்

தேனி மாவட்டம் போடி அருகே ஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே 10-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த 15-வயது மாணவியை ஏமாற்றி அழைத்துச்சென்று இரண்டாவது திருமணம் செய்த 43-வயது நபரை போலீசார் கைது செய்தனர்.

கையில் செல்போனுடன் பேசியவாறே காவல் நிலையத்தை விட்டு அசால்ட்டாக வெளியே வரும் இவர் தான் மைனர் பெண்ணை ஏமாற்றி மணந்த கவர்மெண்ட் மாப்பிள்ளை கிருஷ்ணன்..!

தேனிமாவட்டம் போடி புதூர் வலசத்துறையை சேர்ந்த 43 வயதான கிருஷ்ணன். தனது மனைவி இறந்து ஒரு வருடம் ஆன நிலையில் 2 வது திருமணத்துக்கு பெண் தேடியுள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த ஒரு வீட்டில் தாய் தந்தையர் காலையில் வேலைக்கு சென்று விட 15 வயது மாணவி மட்டும் வீட்டு வேலைகளை செய்து கொண்டு ஆன்லைன் மூலம் 10 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

அவரிடம் அவ்வப்போது சென்று பேசுவதை வழக்கமாகிய கிருஷ்ணன், அவரை தனது காதல் வலையில் வீழ்த்தியுள்ளார். பழனிக்கு சாமிகும்பிட போகலாம் என ஆசைகாட்டி இரு தினங்களுக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்த மாணவியை தனது டி.வி.எஸ் வாகனத்தில் அழைத்துச்சென்றுள்ளார்.

அங்கு வைத்து மாணவியை மிரட்டி கட்டாயத் திருமணம் செய்துள்ளார் கிருஷ்ணன். இது குறித்து போடி நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், புது மாப்பிள்ளை கிருஷ்ணனை மடக்கிய காவல்துறையினர். மைனர் பெண்ணை மயக்கி கடத்திச்சென்று கட்டாய திருமணம் செய்ததோடு பாலியல் ரீதியாக அத்துமீறி அவரது வாழ்க்கையோடு விளையாடிய கிருஷ்ணனை போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர்.

பள்ளி மாணவியின் வாழ்க்கையையே சீரழித்ததாக கைது செய்யப்பட்ட கிருஷ்ணன் கையில் செல்போனை கொடுத்து பேசவைத்து நீதிமன்றம் அழைத்துச்சென்றனர் காவல்துறையினர்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த முககவசம் அணிய கைதானவரிடம் புத்தி சொன்ன போலீசார், இரு சக்கர வாகனத்தில் போக்குவரத்து விதியை மீறி 3 பேராக அமர்ந்து தலைகவசம் அணியாமல் நீதிமன்றத்திற்கு பயணம் மேற்க் கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments