சிறந்த நிர்வாகம் கொண்ட பெரிய மாநிலங்களின் தரவரிசையில் தமிழ்நாடு இரண்டாவது இடம் - பப்ளிக் அபயர்ஸ் சென்டர் ஆய்வு

0 1617

சிறந்த நிர்வாகம் கொண்ட பெரிய மாநிலங்களில் கேரளா முதலிடத்திலும், தமிழ்நாடு இரண்டாவது இடத்திலும் இருப்பதாக பெங்களூருவை சேர்ந்த ஆய்வு அமைப்பான பப்ளிக் அபயர்ஸ் சென்டர்  தெரிவித்துள்ளது.

நிலையான வளர்ச்சியின் அடிப்படையில் இந்த தரவரிசை வெளியிடப்பட்டுள்ளதாக அந்த அமைப்பின் தலைவராக இருக்கும் இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தெரிவித்துள்ளார்.

ஆந்திரா, கர்நாடகா மாநிலங்கள் இந்த பட்டியலில் 3வது, 4வது இடத்திலும், உத்தரப்பிரதேசம், பீகார், ஒடிசா மாநிலங்கள் கடைசி இடத்திலும் உள்ளன.

சிறிய மாநிலங்களில் கோவா முதலிடத்திலும், மேகாலயா, இமாச்சலப் பிரதேசம் மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன. சிறந்த யூனியன் பிரதேசங்களில் சண்டிகர் முதலிடத்திலும், புதுச்சேரி 2வது இடத்திலும் உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments