தேசிய பேரிடர் மேலாண்மை படையில் முதல் முறையாக நாட்டு நாய் படை : பல மாத பயிற்சிக்கு பின்னர் உருவாக்கியது என்.டி.ஆர்.எப்

0 1366

தேசிய பேரிடர் மேலாண்மை படையின் சேவையில் இந்திய நாயினங்களும் இணைக்கப்பட்டுள்ளன. உத்தரபிரதேசத்தின் காசியாபாத்தில் உள்ள அந்த படையின் பயிற்சி மையத்தில் புதிதாக பயிற்சி அளிக்கப்பட்ட நாய்களின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் உள்நாட்டு இனத்தை சேர்ந்த நாய்களும், பங்கேற்று அசத்தின. வழக்கமாக வெளிநாட்டு நாய்களுக்கு மட்டுமே இது போன்ற பயிற்சி அளிக்கப்படும் நிலையில், முதல் முறையாக உள்நாட்டு நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை படையின் எட்டாவது பிரிவு பாட்டாலியன் கமாண்டர் பி.கே.திவாரி கூறியுள்ளார்.

உள்நாட்டு நாயினங்கள், வெளிநாட்டு நாய்களுக்கு எந்த விதத்திலும் சளைத்தவை இல்லை என்றும், மோப்பத்திறனிலும், கட்டளைகளை நிறைவேற்றுவதிலும் உள்நாட்டு நாய்கள் திறன் மிக்கவை என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments