நழுவிய செல்போனை பிடிக்கும் முயற்சியில் நான்காவது மாடியில் இருந்து தவறி விழுந்த இளம்பெண் பலி

0 25697
நழுவிய செல்போனை பிடிக்கும் முயற்சியில் நான்காவது மாடியில் இருந்து தவறி விழுந்த இளம்பெண் பலி

சென்னை அயனாவரம் அருகே கையில் வைத்திருந்த செல்போன் நழுவியதால், அதை பிடிக்கும் முயற்சியில் நான்காவது மாடியில் இருந்து விழுந்த இளம்பெண் பலியானார்.

நம்மாழ்வார்பேட்டையைச் சேர்ந்த யாமினி கடந்த 25 -ந் தேதி நான்காவது மாடியில் உள்ள தனது வீட்டின்  பால்கனி சுவற்றின் ஓரமாக நின்று பேசிக் கொண்டிருந்ததாகவும், கையில் இருந்த செல்போன் நழுவியதால் தாவி பிடிக்க முயன்று, மாடியில் இருந்து இடறி விழுந்ததாகவும் குடும்பத்தினர் கூறுகின்றனர்.

கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தவர் இன்று உயிரிழந்தார். 

செல்போனை பிடிக்கும் போது தவறி விழுந்தாரா? திருமண பேச்சு பிடிக்காமல் குதித்துவிட்டாரா? என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments