ஈஸ்வரன் திரைப்பட படப்பிடிப்புக்கு மத்தியில் கோட்டை மாரியம்மன் கோயிலில் சிம்பு வழிபாடு

0 23478

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலுக்கு சென்று நடிகர் சிலம்பரசன் வழிபாடு நடத்தியுள்ளார். 

சுசீந்திரன் இயக்கும் ஈஸ்வரன் திரைப்படத்தில் சிம்பு நடித்து வருகிறார். அதன் படப்பிடிப்பு திண்டுக்கல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. அதன் படப்பிடிப்பு மத்தியில் சிம்பு சுற்றுவட்டாரத்திலுள்ள கோயில்களுக்கு சென்று வழிபாடு நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் சிலம்பரசன் நேற்று திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தியுள்ளார். அதன் புகைப்படமும் தற்போது சமூக வலைதலளங்களில் வைரலாக பரவு வருகிறது.

விஜயதசமி அன்று சிம்புவின் ஈஸ்வரன் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.அதில் சிம்பு உடல் எடை குறைத்து மெலிதான தேகத்துடன் இருந்த பர்ஸ்ட் லுக் அவருடைய ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

சிம்புவின் ரசிகர்களிடையை பெரும் எதிர்பார்ப்பில் இருந்து வருகிறது ஈஸ்வரன் திரைப்படம். இதனால் இப்படத்தை ஐந்து மொழிகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது     

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments