குஜராத்தில் பிரதமர் மோடி 2 நாள் பயணம் - நர்மதாவில் பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்தார்

0 674
குஜராத்தில் பிரதமர் மோடி 2 நாள் பயணம் - நர்மதாவில் பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்தார்

குஜராத்தின் நர்மதா மாவட்டத்தில் உள்ள கெவாடியாவில், ஆரோக்கிய வேன் என்ற திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்து அதில் பயணம் செய்தார்.

பலவகையான மருத்துவ குணம் வாய்ந்த மூலிகைச் செடிகளால் உருவாக்கப்பட்டுள்ள பூங்காவில் ஆரோக்கிய வேன் என்பதன் மூலம் பயணம் செய்யும் திட்டம் துவக்கப்பட்டுள்ளது.

அதன்பின்னர், கெவாடியாவில் ஏக்தா மால் ஒன்றையும் குழந்தைகளுக்காக சத்துணவு பூங்கா ஒன்றையும், மோடி திறந்து வைத்தார். அங்கு இயக்கப்பட்ட சத்துணவு பொம்மை ரயிலில் அவர் பயணித்தார்.

கெவாடியாவில் ஜங்கிள் சபாரி என அழைக்கப்படும் சர்தார் பட்டேல் உயிரியல் பூங்காவையும் மோடி திறந்து வைக்கிறார். நாளை சர்தார் பட்டேல் சிலைக்கான நீர் விமானம் மற்றும் படகு போக்குவரத்தை மோடி துவக்கி வைக்க உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments