புதுச்சேரியில் அதிவேகமாக வந்த கார், மினி லாரி மீது மோதி விபத்து

0 1422
புதுச்சேரியில் அதிவேகமாக வந்த கார், மினி லாரி மீது மோதி விபத்து

புதுச்சேரி வில்லியனூரில் அதிவேகமாக வந்த கார், மினி லாரி மீது மோதிய விபத்தின் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

கீழ்சாத்தமங்கலத்தை சேர்ந்த ராமலிங்கம் என்பவர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பெற்றோருடன் இன்று காலை காரில் சென்று கொண்டிருந்தார். உளவாய்க்கால் அருகே அதிவேகமாக சென்ற கார், எதிரே வந்த மினி லாரி மீது மோதி நொறுங்கியது.

காரில் வந்த 3 பேரும் படுகாயமடைந்த நிலையில், அங்கிருந்த பொதுமக்களே, கார் கண்ணாடியை உடைத்து அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து நடந்த இடத்தில் வாகனங்கள் செல்லும் வேகத்தை குறைக்க இருபுறமும் பேரிகார்டுகள் வைக்கப்பட்டிருந்த போதும், அதனை அதிவேகமாக கார் கடந்ததே விபத்துக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments