பிரதமர் மோடி 2 நாட்கள் குஜராத்தில் பயணம்.. முன்னாள் முதல்வர் கேசுபாய் படேல் மறைவுக்கு இரங்கல்

பிரதமர் மோடி 2 நாட்கள் குஜராத்தில் பயணம்.. முன்னாள் முதல்வர் கேசுபாய் படேல் மறைவுக்கு இரங்கல்
மறைந்த குஜராத் முன்னாள் முதலமைச்சர் கேசுபாய் பட்டேலின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார்.
முன்னதாக இரண்டு நாள் பயணமாக அகமதாபாத் வந்த மோடியை விமான நிலையத்தில் ஆளுநர் ஆச்சார்ய தேவ்ரத், முதலமைச்சர் விஜய் ரூபானி உள்ளிட்டோர் வரவேற்றனர்.
காந்திநகர் புறநகரில் வசிக்கும் தமது தாயாரை இன்று சந்திக்க உள்ள மோடி, நர்மதா மாவட்டம் கேவாடியாவில், பட்டேல் சிலை அருகே பல்வேறு சுற்றுலாத் திட்டங்களை துவக்கி வைக்கிறார். அகமதாபாத் கேவாடியா இடையேயான நீர்விமான சேவையை நாளை மோடி துவக்கி வைக்க உள்ளார்.
#WATCH: Prime Minister Narendra Modi arrives at Ahmedabad. He is on a 2-day visit to Gujarat. pic.twitter.com/oYOlDie8w5
— ANI (@ANI) October 30, 2020
Comments