தைவானில் கடந்த 200 நாட்களில் யாருக்கும் கொரோனா பாதிப்பு, பலி இல்லை..!

0 679
தைவானில் கடந்த 200 நாட்களில் யாருக்கும் கொரோனா பாதிப்பு, பலி இல்லை..!

தைவான் நாட்டில் கடந்த 200 நாள்களுக்கும் யாருக்கும் கொரோனா உறுதியாகவில்லை.

உலகின் பல நாடுகளிலும் நாள்தோறும் கொரோனா பாதிப்பும், பலியும் அதிக எண்ணிக்கையில் நேரிட்டு வருகிறது. 2 கோடிக்கும் மேல் மக்கள் தொகை கொண்ட ஆசிய நாடான தைவானில் ஏப்ரல் 12ம் தேதிக்கு முன்பு 550 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், 7 பேர் மட்டும் பலியாகியிருந்தனர்.

அதன்பிறகு எந்த பாதிப்பும், உயிர் பலியும் நேரிடவில்லை. உலகில் கொரோனா பரவ ஆரம்பித்ததும் வெளிநாட்டினர் வருகைக்கு தடை விதித்ததும், கடந்தகால தொற்று பரவல் படிப்பினைகளை கொண்டு எடுத்த நடவடிக்கைகள் உள்ளிட்டவையுமே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments