பள்ளிப்பாளையத்தில் பட்டாசு வெடித்த விபத்தில் 2பேர் பலி

0 620
பள்ளிப்பாளையத்தில் பட்டாசு வெடித்த விபத்தில் 2பேர் பலி

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே பட்டாசு வெடித்த விபத்தில் 2பேர் உயிரிழந்தனர். செல்லப்புதுரான் தோட்டம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பயங்கர வெடி சத்தம் கேட்டுள்ளது.

தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் அங்கு சென்றபோது, தங்கராஜ், ராஜகணபதி என்ற இருவர் உடல்கருகி உயிரிழந்தது தெரிய வந்தது. தீபாவளிக்காக வீட்டில் வைத்திருந்த பட்டாசுகளை பிரிக்க முயலும் போது இந்த சம்பவம் நிகழ்ந்திருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments