சென்னையில் இரண்டரை கோடி ரூபாய் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு... தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி கைது

0 1829
சென்னையில் இரண்டரை கோடி ரூபாய் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு... தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி கைது

சென்னை தியாகராய நகர் மொத்த வியாபார நகைக்கடையில் நடந்த இரண்டரை கோடி ரூபாய் நகை கொள்ளை வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த முக்கிய கொள்ளையனை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை தியாகராய நகர் மூசா தெருவில் ராஜேந்திர குமார் என்பவருக்கு சொந்தமான மொத்த வியாபார நகைக் கடையில் நள்ளிரவில் புகுந்த கொள்ளையர்கள் இருவர் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்புடைய நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.

கடந்த 21-ம் தேதி நடந்த இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக 5 தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். செல்போன் டவர் மூலம் கொள்ளையர்களின் செல்போன் எண்கணைக் கண்டறிந்த போலீசார் அவர்களை தேடி வந்த நிலையில், கோடம்பாக்கத்தை சேர்ந்த சுரேஷ் என்கிற மார்க்கெட் சுரேஷ் என்ற கொள்ளையனை திருவள்ளூரில் கைது செய்தனர்.

இதனிடையே, கொள்ளை வழக்கின் முக்கிய குற்றவாளியான அப்புனு என்கிற வெங்கடேசன் தலைமறைவாக இருந்து வந்த நிலையில், அவன் செய்யாறில் பதுங்கியிருப்பது செல்போன் சிக்னல் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு தனிப்படை போலீசார் விரைந்தனர்.

அங்கு கொள்ளையன் அப்புனு வெங்கடேசனின் தோழியையும், கூட்டாளியையும் முதலில் பிடித்த போலீசார், அவர்கள் கொடுத்த தகவலை வைத்து கொள்ளையனை கைது செய்துள்ளனர். தொடர்ந்து, அப்பனு வெங்கடேசன் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments