திருப்பாச்சி அரிவாள.. தூக்கி கிட்டு வாடா வாடா..! பெண்களிடம் பிதுங்கிய புலி
கடலூர் அடுத்த தொண்டங்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவரின் மகன் குடி போதையில் கையில் அரிவாளுடன் அரை நிர்வாணமாக ரகளை செய்த வீடியோ காட்சி வெளியாகி உள்ளது. பலரை வெட்டுவது போல மிரட்டியவனின் கையை பிதுக்கி அரிவாளை பறித்த தைரியலட்சுமிகள் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...
கையில் வீச்சரிவாளுடன் பூச்சாண்டி காட்டும் இவர் தான் கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த தொண்டங்குறிச்சி ஊராட்சிமன்றத்தலைவர் பச்சையப்பனுடைய மகன் பாஸ்கர் ..!
கையில் அரிவாளுடன் அலப்பறை செய்த பாஸ்கரை அடக்க வந்த பாக்சர் போல வேட்டி துறந்த நிலையில் அங்கு வந்தார் சித்தப்பாவின் போதை வாரிசு..! அவரையும் வெட்டுவது போல அரிவாளை வீசி பாஸ்கர் செய்த ரகளையால் அருகில் நின்ற சின்னஞ்சிறுவர்கள் பதறித்துடித்தனர்..!
பாஸ்கரின் அடவாடிக்கு அஞ்சாமல் அவரது உறவுக்கார பெண்கள் சிலர் தைரியமாக அரிவாளை பறிப்பதற்கு முயற்சிக்க அவர்களையும் வெட்டுவது போல பூச்சாண்டி காட்டியதால் அனைவரும் அருகில் செல்ல அஞ்சினர் .
ஆபாச வார்த்தைகளால் திட்டி கொண்டு ரகளையில் ஈடுபட்ட பாஸ்கரை அடக்க எந்த ஒரு ஆண் மகனும் முன்வராத நிலையில் அவரை பின் தொடர்ந்த தைரிய லட்சுமிகள் சாமர்த்தியமாக சென்று அவனை சுற்றிவளைத்தனர். அவனது கையை பிதுக்கி அரிவாளை பறித்துக் கொண்டு அந்த அரை நிர்வாண பக்கிரியை அப்படியே நடுத்தெருவில் நிறுத்தி விட்டு சென்றனர்.
அதன் பின்னரும் போதை அடங்காமல் தெருவில் விழுந்து அங்கபிரதட்சணம் செய்த பாஸ்கரை உறவுக்கார பெண்கள் சமாதானப்படுத்தி இழுத்துச்சென்றனர்.
இது முதல் முறை அல்ல என்றும் போதை தலைக்கேறினால் இது போல கையில் அரிவாளுடன் யாரையாவது வெட்டுவதற்கு கிளம்புவதை ஜூனியர் பிரசிடென்ட் பாஸ்கர் வாடிக்கையாக செய்து வருவதால் வேப்பூர் காவல்துறையினர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராமத்து மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments