சென்னையின் முக்கிய நீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரி 60 சதவீதம் அளவுக்கு நிரம்பியது

0 1851
சென்னையின் முக்கிய நீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரி 60% அளவுக்கு நிரம்பியது

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவில் 60 சதவீத அளவுக்கு நீர் நிரம்பி உள்ளது. 

24 அடி உயரம் வரை தண்ணீரை தேங்கி வைக்கும் நிலையில் இப்போது 18.21 அடிக்கு அந்த ஏரியில் தண்ணீர்  உள்ளது. நீர் வரத்து வினாடிக்கு 460 கன அடி வீதமாக உள்ள நிலையில், கிருஷ்ணா நீர் வரத்து மற்றும் பருவமழையால் அடுத்த 15 நாட்களுக்குள் செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டி விடும் என்று எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதனிடையே பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 971 கன அடி வீதம் நீர் வருகிறது.  புழல்,சோழவரம், பூண்டி, செம்பரபாக்கம் ஆகிய 4 முக்கிய ஏரிகளில் மொத்தமாக 5.9 டிஎம்சி நீர் இருப்பு உள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments