பிரான்சில் நாளை முதல் மீண்டும் ஊரடங்கு அமல்

0 4828
பிரான்சில் நாளை முதல் மீண்டும் ஊரடங்கு அமல்

பிரான்சில் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் வேகமாகப் பரவி வருவதால், நாளை முதல் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அதிபர் இமானுவேல் மேக்ரான் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர், வீடுகளில் இருந்து பணிபுரிய முடியாத சூழல் இருந்தால் அலுவலகம் சென்று பணியாற்றலாம் என்றும், பெரும்பாலான பள்ளிகள் திறந்திருக்கும் என்றும் தெரிவித்தார்.

அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு, மருத்துவ சிகிச்சை போன்ற காரணங்களுக்காக மட்டும் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

பிரான்சில் கடந்த மார்ச் மாதம் முதல் முறை அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு மே 11 ஆம் தேதி தளர்த்தப்பட்டது. கொரோனா பாதிப்பால் பிரான்சில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments