காவிரியில் கழிவு நீரைத் திறந்து விடும் கர்நாடகா... நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு?

0 4459
காவிரியில் கழிவு நீரைத் திறந்து விடும் கர்நாடகா... நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு?

கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்ததால், ஒகேனக்கலுக்கு வரும் காவிரி ஆற்றில் நீர் வரத்துப் பத்தாயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. ஆனால், காவிரி ஆற்று நீரில் அதிகளவில் பெங்களூர் கழிவுகள் கலந்து வருவதால் துர்நாற்றம் வீசுவதாகப் புகார் எழுந்துள்ளது...

காவிரியில் கழிவு நீர் அதிகளவில் கலந்து வருவதால், மேட்டூர் அணையில் தேங்கியுள்ள காவிரி நீர் பச்சை நிறத்துக்கு மாறி துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது. இதனால், சுகாதார பிரச்னை ஏற்பட்டு பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், மீன் பிடி தொழிலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

காவிரியில் கழிவு நீர் கலக்காமல் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் புகார் தெரிவித்து வநத நிலையில், தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் நீர்த்தேக்கப் பகுதியான கோட்டையூர் பரிசல் துறையில் ஆய்வு மேற்கொண்டார்...

ஆய்வுக்குப் பிறகு நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார், “காவிரியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தூய்மைப் பணிகளை மேற்கொள்ளாததால் சுகாதார பிரச்னை ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவிலிருந்து மேட்டூருக்கு வரக்கூடிய தண்ணீரை மாநில எல்லையான ஒகேனக்கல்லில் ஆய்வுக்கூடம் அமைத்து சோதனை செய்ய வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments