சென்னையின் அருகாமை மாவட்ட பகுதிகளில் வெளுத்து வாங்கிய மழை

0 1326
சென்னையின் அருகாமை மாவட்ட பகுதிகளில் வெளுத்து வாங்கிய மழை

சென்னைக்கு அருகே உள்ள அண்டை மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளிலும், விடிய, விடிய பெய்த மழையால், தண்ணீர் தேங்கி, பொதுமக்கள் அவதிக்கு ஆளாகினர்.

மாமல்லபுரம், கோவளம், முட்டுக்காடு, கானத்தூர், நாவலூர், கேளம்பாக்கம், திருப்போரூர் உள்ளிட்ட இடங்களில் நள்ளிரவு முதல் பரவலாக பெய்த மழையால், சாலைகள் எங்கும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

திருப்போரூர், கேளம்பாக்கம் தையூர் சாலை, படூர் உள்ளிட்ட சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். தாழ்வான பகுதிகளில், சில இடங்களில், வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்ததால், குடியிருப்பு வாசிகள், அவதியுற்றனர்.

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில், நீர்நிலைகள் நிரம்பியுள்ளதாலும், ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்திருப்பதாலும், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments