இறுதி பருவ தேர்வுகளை ஆன்லைன் மூலம் நடத்தும் போது, அரியர் தேர்வுகளை ஏன் நடத்த கூடாது? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

0 1986
இறுதி பருவ தேர்வுகளை ஆன்லைன் மூலம் நடத்தும் போது, அரியர் தேர்வுகளை ஏன் நடத்த கூடாது?

இறுதி பருவ தேர்வுகளை ஆன் லைன் மூலம் நடத்தும் போது, அரியர் தேர்வுகளை ஏன் நடத்த கூடாது எனக் கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், அரியர் தேர்வு ரத்து குறித்து குறிப்பிட்டு பதில் மனு தாக்கல் செய்யாத பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால், அரியர் தேர்வுகளை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில்,இந்த வழக்குகள் நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பதில் மனுத் தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என தமிழக அரசுத் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து, அரியர் தேர்வுகள் ரத்து விவகாரத்தில் பல்கலைக்கழக மானியக் குழுவின் நிலைபாடு என்ன எனவும், அரியர் தேர்வு குறித்து பதில் மனுவில் எதுவும் குறிப்பிடவில்லை எனவும் கேள்வி எழுப்பினர். மேலும், நீதிமன்றத்தை கேலிக்கூத்தாக்க வேண்டாம் எனவும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், பல்கலைக்கழக மானியக் குழு செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

இறுதி பருவ தேர்வுகளை ஆன்லைன் மூலம் நடத்தும் போது, அரியர் தேர்வுகளை ஏன் நடத்த முடியாது எனவும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், கூடுதல் பதில் மனு தாக்கல் செய்ய பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு உத்தரவிட்டார். அதேபோல தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்கி, விசாரணையை நவம்பர் 20ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments