மாமல்லபுரம் மேம்பாட்டிற்கு நிதி ஒதுக்குவது தொடர்பாக 4 வாரத்தில் பதிலளிக்க மத்திய, மாநில அரசுக்கு இறுதி அவகாசம் - சென்னை உயர்நீதிமன்றம்

0 516
மாமல்லபுரம் மேம்பாட்டிற்கு நிதி ஒதுக்குவது தொடர்பாக 4 வாரத்தில் பதிலளிக்க மத்திய, மாநில அரசுக்கு இறுதி அவகாசம் - சென்னை உயர்நீதிமன்றம்

மாமல்லபுரம் மேம்பாடு மற்றும் அழகுபடுத்துவதற்கு நிதி ஒதுக்குவது குறித்து 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால், சம்பந்தப்பட்ட மத்திய, மாநில அரசுகளின் செயலாளர்கள் ஆஜராக உத்தரவிடப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

இது தொடர்பான வழக்கில், நாடு முழுவதும் உள்ள 16 சுற்றுலாத் தலங்களில் மாமல்லபுரம் 14வது இடமாக இடம்பெற்றுள்ளதாகவும், அதன் மேம்பாட்டிற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த 400 பக்க அறிக்கை தயாராக இருப்பதாகவும், கொரோனா பேரிடர் காலமாக இருப்பதால் நிதி ஒதுக்கீடு குறித்த தகவல்கள் இல்லை என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நிதி ஒதுக்குவதற்கு கொரொனா பேரிடரை காரணமாக கூற முடியாது என கூறிய நீதிபதிகள், இது குறித்து மத்திய, மாநில அரசுகள் 4 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று இறுதி அவகாசம் அளித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments