சென்னையில் மழைநீரை அகற்றும் பணியில் போக்குவரத்துப் போலீசார்

0 1373
சென்னையில் மழைநீரை அகற்றும் பணியில் போக்குவரத்துப் போலீசார்

சென்னையில் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்படும் 120 இடங்களை அடையாளம் கண்டு, போக்குவரத்தை சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

மழைநீரை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீர் செய்யும் பணியில், 3 ஆயிரம் போக்குவரத்து மற்றும் ஆயுதப்படை போலீசார் ஈடுபட்டிருப்பதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.

மழை நேரங்களில், சாலையோரங்களில், வாகனங்களை நிறுத்தக் கூடாது என்றும், வாகனங்களை வேகமாக ஓட்டிச் செல்லக் கூடாது என்றும், போக்குவரத்து கூடுதல் ஆணையர் கண்ணன், வாகன ஓட்டிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments