வடகிழக்கு பருவமழை தொடங்கியதன் எதிரொலி... நிரம்பும் சென்னை ஏரிகள்..! மக்கள் மகிழ்ச்சி

0 1599
வடகிழக்கு பருவமழை தொடங்கியதன் எதிரொலி... நிரம்பும் சென்னை ஏரிகள்..!

சென்னை பெருநகர மக்களின் முக்கிய நீர் ஆதாரமான புழல், பூண்டி, செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளுக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள சூழலில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு முதல் பெய்த மழையால், நீர்நிலைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

அதன்படி, 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் 2,094 மில்லியன் கன அடிக்கு நீர் இருப்பு உள்ளது. பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 971 கன அடி வீதம் நீர் வந்துகொண்டிருக்கிறது.

இதேபோன்று, 3645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில்  2182 மில்லியன் கன அடிக்கு நீர் இருப்பு உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல், பூண்டி, செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகிய 4 முக்கிய ஏரிகளில் மொத்தமாக 5.9 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments