அரசு நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் போராட்டம் நடத்தினால், நடவடிக்கையை கைவிட்டு அதிகாரிகள் திரும்பி வந்து விடுவார்களா? -உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி

0 1616
அரசு நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் போராட்டம் நடத்தினால், நடவடிக்கையை கைவிட்டு அதிகாரிகள் திரும்பி வந்து விடுவார்களா? -உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள், போராட்டம் நடத்தினால் அதிகாரிகள் நடவடிக்கையை கைவிட்டு திரும்பி விடுவார்களா என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பி உள்ளது.

கரூர் மாவட்டம் தாந்தோணி கிராமத்தில் ஓடை மற்றும் வாய்க்கால் ஆக்கிரமிப்பு குறித்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு, ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று வினாவினர்.

ஆட்களை திரட்டி ஆக்கிரமிப்பாளர்களை போராட்டம் நடத்துவதால் ஆய்வு செய்ய இயலவில்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நிலத்தை ஆக்கிரமிப்பு செய்யும் வரை அதிகாரிகள் என்ன செய்தார்கள் என்றும், கடமை தவறிய அதிகாரி மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும், ஆக்கிரமிப்பு நிலத்தை உடனடியாக அளவீடு செய்து நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்ய கரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டனர்,

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments