கல்லூரி கல்வி இயக்குநராக பூர்ணசந்திரன் நியமனம் செய்யப்பட்டதை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

0 943
கல்லூரி கல்வி இயக்குநராக பூர்ணசந்திரன் நியமனம் செய்யப்பட்டதை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கல்லூரி கல்வி இயக்குநராக பூர்ணசந்திரன் நியமனம் செய்யப்பட்டதை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கல்லூரி கல்வி இயக்குனராக இருந்த சாருமதி கடந்த மே மாதம் ஓய்வு பெற்றதையடுத்து பூர்ணசந்திரன் கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி கல்லூரி கல்வி இயக்குனராக நியமிக்கப்பட்டார்.

பணிமூப்பில் உள்ள தன்னை நியமிக்காமல் கல்லூரிக் கல்வி இயக்குநராக பூர்ணசந்திரனை நியமித்தை எதிர்த்து திருவாரூர் திரு.வி.க அரசு கலைக்கல்லூரி முதல்வர் கீதா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் பூரணசந்திரன் நியமனத்தில் விதிமுறைகள் மீறப்பட்டதாக அவர் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கை மீண்டும் விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பார்த்திபன், கல்லூரி கல்வி இயக்குனராக பூர்ணசந்திரன் நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments