இங்கிலாந்தில் பாலாடைக் கட்டியை உருண்டு புரண்டு பிடிக்கும் பந்தயம்

0 383

இங்கிலாந்தில் நடைபெற்ற பாலாடைக் கட்டியை உருண்டு பிடிக்கும் போட்டியை நூற்றுக்கணக்கானோர் கண்டு ரசித்தனர். க்ளூசெஸ்டர்ஷையர் என்ற இடத்தில் நடத்தப்பட்ட இந்தப் போட்டியில் சீஸ் எனப்படும் பாலாடைக் கட்டியை உருட்டி விட்டதும், அதற்காகவே காத்திருந்த போட்டியாளர்கள் 180 மீட்டர் சறுக்கலான புல்வெளியில் உருண்டு புரண்டு ஓடினர்.

இந்தப் பந்தயத்தில் பங்கேற்ற சிலர் தங்களைக் கட்டுப்படுத்த முடியாமல் புரண்டது பார்வையாளர்களை சிரிப்பலையில் ஆழ்த்தியது. இந்தப் போட்டியில் வேகமாக உருண்டு பாலாடைக் கட்டியைக் கைப்பற்றிய கிரிஸ் ஆன்டர்ஸன் என்பவர் சாம்பியன் பட்டம் வென்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments