இறுதி செமஸ்டர் மாணவர்களுக்கு, முந்தைய தேர்வுப்படி மதிப்பெண் தர மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை- யூஜிசி

0 2543
இறுதி செமஸ்டர் மாணவர்களுக்கு, முந்தைய தேர்வுப்படி மதிப்பெண் தர மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை- யூஜிசி

இறுதி செமஸ்டர் மாணவர்களுக்கு, முந்தைய தேர்வு அடிப்படையில் மதிப்பெண் வழங்க மாநில அரசுக்கு அதிகாரமில்லை என உயர்நீதிமன்றத்தில் பல்கலைக்கழக மானியக்குழு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

பொறியியல், கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு மாணவர்களின் அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், பல்கலைக்கழக மானியக் குழு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், இறுதி பருவ தேர்வை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள பல்கலைக்கழக மானியக்குழு, இறுதிப்பருவத் தேர்வுகள் நடத்த வேண்டியது அவசியமானது என்று குறிப்பிட்டுள்ளது.

செப்டம்பர் 30ம் தேதிக்குள் இறுதி பருவத் தேர்வு நடத்த இயலாவிட்டால் கால அவகாசத்தை நீட்டிக்க கோரலாம் என்றும் பதில் மனுவில் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments