டெல்லியில் ஹவாலா நிறுவனம் நடத்தி வந்தவர் வீடு அலுவலகங்களில் சோதனை: கட்டுக்கட்டாக ரொக்கப் பணம் ரூ 62 கோடி பறிமுதல்

0 1151
டெல்லியில் ஹவாலா நிறுவனம் நடத்தி வந்தவர் வீடு அலுவலகங்களில் சோதனை: கட்டுக்கட்டாக ரொக்கப் பணம் ரூ 62 கோடி பறிமுதல்

டெல்லியில் நியுபிரண்ட்ஸ் காலனி பகுதியில் ஒரு வீட்டை சோதனையிட்ட வருமான வரித்துறையினர் கட்டுக்கட்டாக 62 கோடி ரூபாய் ரொக்கப்பணத்தைப் பறிமுதல் செய்துள்ளனர். 

ஹவாலா கும்பலைச் சேர்ந்த சஞ்சய் ஜெயின் என்பவரது வீடுகள் அலுவலகங்கள் என வருமான வரித்துறை அதிகாரிகள் மொத்தம் 42 இடங்களில் நேற்று சோதனையிட்டனர்.

அலமாரிகளில் கட்டுக்கட்டாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த இரண்டாயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் இதில் சிக்கின. போலி பில்கள் தயாரித்து சட்ட விரோதமான பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டு வந்ததாக சஞ்சய் ஜெயின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments