அரசை விமர்சிக்கும் பொதுமக்கள் மீது வழக்கு போடக்கூடாது- போலீசாருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

0 2852
அரசை விமர்சிக்கும் பொதுமக்கள் மீது வழக்கு போடக்கூடாது- போலீசாருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

அரசை விமர்சிக்கும் பொதுமக்கள் மீது வழக்குப் போடக்கூடாது என்று உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

கொல்கத்தாவின் ராஜா பஜாரில் மக்கள் நெருக்கமாக கூடியிருப்பதை சுட்டிக்காட்டி முகநூலில் பதிவிட்ட டெல்லியைச் சேர்ந்த ரோஷினி பிஸ்வாஸ் என்பவரை விசாரணைக்கு ஆஜராக கொல்கத்தா போலீசார் சம்மன் அனுப்பினர்.

இதனை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள், சாதாரணப் பொதுமக்கள் மீது வழக்குப் பதிவு செய்வது பேச்சுரிமைக்கும் கருத்துரிமைக்கும் ஆபத்தானதாகும் என்றும், நீதிமன்றம் தாமாகவே முன்வந்து தலையிடும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments