அபிநந்தனை விடுவிக்காவிட்டால் தாக்குதல் நடத்த இந்தியா தயாரானதா? -பாகிஸ்தான் எம்.பி பேச்சால் கடும் சர்ச்சை

0 8318
அபிநந்தனை விடுதலை செய்யாவிட்டால் தாக்குதல் நடத்த இந்தியா தயாரானதா? -பாகிஸ்தான் எம்.பி பேச்சால் கடும் சர்ச்சை

இந்திய விமானப் படையின் விங் கமாண்டர் அபிநந்தனை விடுதலை செய்யாவிட்டால் இந்தியா பாகிஸ்தான் மீது வான் தாக்குதல் தொடுக்கப் போவதாக எச்சரித்தது என்று பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி எம்பி அயாஸ் சாதிக் குற்றம் சாட்டியுள்ளார்.

2019 பிப்ரவரியில் பாகிஸ்தானின் எப்.16 விமானத்தை விரட்டிச் சென்று வீழ்த்திய பின் சிறைப்பிடிக்கப்பட்டார் அபிநந்தன்.

அப்போது நடைபெற்ற அவசரக் கூட்டத்திற்கு வந்த மெஹ்மூத் குரேஷி இந்தியா தாக்குதல் நடத்த இருப்பதாக கூறியதும், ராணுவத் தளபதி பாஜ்வாவின் கால்கள் நடுங்கின என்று குறிப்பிட்டார்.

அபிநந்தனை போக விடுங்கள் என்று குரேஷி கேட்டுக் கொண்டதாகவும் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பி தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்துதான் அபிநந்தன் வர்த்தமான் வாகா அட்டாரி எல்லை வழியாக 2019ம் ஆண்டு மார்ச் முதல்தேதியில் இந்திய ராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் பாகிஸ்தான் எம்பி குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments