தமிழக உள்ளாட்சி அமைப்புக்கான நிலுவைதொகையை வழங்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

0 612
தமிழக உள்ளாட்சி அமைப்புக்கான நிலுவைதொகையை வழங்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

2016ம் ஆண்டு முதல் நிலுவையில் இருக்கும் தமிழக உள்ளாட்சி அமைப்புக்கான நிதியை வழங்க, மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

நிலுவைத்தொகையால் சுகாதாரம், தெரு விளக்கு உட்பட அனைத்து அத்தியாவசிய பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனுவை விசாரித்த தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வு, வழக்கை விசாரிப்பதற்கான முகாந்திரம் இல்லை எனவும், மனுதாரர் வேண்டுமானால் உயர் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் கேட்கலாம் என்றும் அறிவுறுத்தி, வழக்கை முடித்து வைத்தது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments