பட்டப்பகலில் கல்லூரி மாணவி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்-கைதான 2 பேர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி பல இடங்களில் ஆர்ப்பாட்டம்

0 2631

ஹரியானாவில் (Faridabad district) பட்டப்பகலில் கல்லூரி மாணவி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் கைதான 2 பேர் மீது கடும் நடவடிக்கை கோரி,பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

நிகிதா தோமர் என்ற அந்த மாணவி நேற்று முன்தினம் கல்லூரிக்கு வெளியே தவ்சீப் என்பவனால் சுட்டு கொல்லப்பட்டார். சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த காட்சி வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியது.

இச்சம்பவத்தில் தவ்சீப், ரேகன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். காதல் திருமணம் செய்து மதம் மாற்றும் லவ் ஜிகாத்தே இதற்கு காரணமென குற்றம்சாட்டியுள்ள நிகிதாவின் குடும்பத்தினர், 2 பேரையும் என்கவுன்டரில் கொல்லும்வரை சடலத்தை எரியூட்ட போவதில்லை எனத் தெரிவித்துள்ளனர். பரீதாபாத் உள்ளிட்ட இடங்களில் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments