தீபிகா படுகோனே மேலாளர் வீட்டில் திடீர் ரெய்டு.. போதைப் பொருள்கள் சிக்கின..!

0 4021
தீபிகா படுகோனே மேலாளர் வீட்டில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சோதனை

இந்தி நடிகை தீபிகா படுகோனே மேனேஜர் வீட்டில் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் (The Narcotics Control Bureau)  நடத்திய திடீர் சோதனையில்,  கஞ்சா எண்ணெய் உள்ளிட்ட போதைப் பொருள்கள் சிக்கியுள்ளன. இதனை தொடர்ந்து நடிகையின் மேனேஜர் தலைமறைவாகியுள்ளார்.

மும்பையில் இந்தி நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத் மர்மமான முறையில் மரணம் அடைந்தது குறித்த வழக்கு விசாரணையில், இந்தி திரையுலகில் போதைப் பொருள் நடமாட்டம் மற்றும் புழக்கம் இருப்பது குறித்த தகவல் கிடைத்தது. இதையடுத்து போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் தனியே வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விசாரணையின்போது, சுசாந்தின் முன்னாள் மேலாளர் ஜெயா சாகாவுடன் 2017ம் ஆண்டில் போதைப் பொருள் குறித்து படுகோனேயின் மேலாளர் கரிஷ்மா பிரகாஷ் சேட்டிங் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து தீபிகா படுகோனேயிடமும், கரிஷ்மாவிடமும் கடந்த மாதம் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தியிருந்தனர்.

இந்நிலையில், மும்பையின் வெர்சோவா பகுதியிலுள்ள கரிஷ்மா வீட்டில் நேற்று போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் திடீரென சோதனை நடத்தினர். இந்த சோதனையில், 2 பாட்டில் கஞ்சா எண்ணெய் (two bottles of cannabis oil) உள்ளிட்டவை சிக்கியுள்ளதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோதனையின்போது கரிஷ்மா வீட்டில் இல்லை எனவும், அவருடைய செல்போன் எண் அணைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து விசாரணைக்கு இன்று நேரில் ஆஜராகும்படி போதைப் பொருள் தடுப்பு பிரிவினரால் வீட்டில் இருந்தோரிடம் சம்மன் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் தீபிகாவின் மேனேஜர் தலைமறைவாகிட்டதாக கருதி அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments