பீகார் தேர்தல்-காலை 10 மணி நிலவரப்படி ஏழு புள்ளி மூன்று ஐந்து சதவீத வாக்குகள் பதிவு

பீகார் சட்டப்பேரவைக்கு முதற்கட்டமாக 71 தொகுதிகளுக்கு நடக்கும் தேர்தலில் காலை 10 மணி நிலவரப்படி 7 புள்ளி மூன்று ஐந்து சதவிகித வாக்குகள் பதிவாகின.
243 இடங்களை கொண்டுள்ள பீகார் சட்டப் பேரவைக்கு அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் 7 ஆம் தேதிகளில் 3 கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கிறது.
இன்று நடக்கும் முதற்கட்ட தேர்தலில் 71 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது. காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு துவங்கியது.
வாக்குசாவடிகளில் வாக்காளர்கள் முகக்கவசங்களை அணிந்து வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
கொரோனா கட்டுப்பாடு காரணமாக ஒவ்வொரு வாக்குசாவடியிலும், வழக்கமான 1600 பேருக்கு பதிலாக 1000 வாக்காளர்கள் மட்டுமே வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மொத்தம் 31,371 வாக்குச்சாவடிகளை அமைக்கப்பட்டு அங்கு கைகழுவ சோப்பு மற்றும் சானிடைசர்கள் வைக்கப்பட்டுள்ளது.
வாக்களார்களின் உடல்வெப்பம் பரிசோதிக்கப்பட்ட பின்னரே வாக்குச்சாவடிக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.முதற்கட்ட தேர்தலில் 2.15 கோடி பேருக்கு வாக்களிக்கும் உரிமை உள்ளது. 1066 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணிக்கும் லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
Comments