3வயது குழந்தையை மீட்க உ.பி.யில் இருந்து ம.பி வரை நிற்காமல் சென்ற சிறப்பு ரயில்

0 3513
3வயது குழந்தையை மீட்க உ.பி.யில் இருந்து ம.பி வரை நிற்காமல் சென்ற சிறப்பு ரயில்

உத்தரப் பிரதேசத்தில் கடத்தப்பட்ட 3 வயது குழந்தையை மீட்க சிறப்பு ரயில் ஒன்று மத்தியப் பிரதேசம் வரை சுமார் 260கிலோ மீட்டர் தூரத்திற்கு நிற்காமல் இயக்கப்பட்டது.

ஸாத்புராவைச் சேர்ந்த ஆஷா ரெய்க்வாரின் 3 வயது குழந்தை காவ்யா கடந்த 25ந்தேதி அன்று காலையில் லலித்பூர் ரயில் நிலையம் அருகே திடீரென மாயமானது. சிசிடிவியை ஆராய்ந்த ரயில்வே போலீசார் அங்கிருந்து புறப்பட்ட ரப்திசாகர் சிறப்பு ரயிலில் ஒரு இளைஞர் குழந்தையுடன் ஏறுவது தெரிந்தது.

இதனை அடுத்து போபாலுக்கு செல்லும் அந்த ரயிலை வழியில் எங்கும் நிற்காமல் செல்லும்படி ரயில் ஓட்டுனருக்கு வயர்லெஸ் மூலம் உத்தரவிடப்பட்டது. அதன்படி போபால் சென்ற அந்த ரயிலை சுற்றி வளைத்த ரயில்வே பாதுகாப்புப் படையினர் கடத்தல்காரனிடம் இருந்து குழந்தையை பத்திரமாக மீட்டனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments