வாரிசு அரசியலால் பல தலைமுறைகளைக் கடந்து வளரும் ஊழலுக்கு எதிராக போராட வருமாறு மக்களுக்கு பிரதமர் அழைப்பு

0 2910

வாரிசு அரசியல் மூலமாக பல தலைமுறைகளுக்கு ஊழல் வளர்த்த முறைக்கு முடிவு கட்டுமாறு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்

டெல்லியில்  ஊழலுக்கு எதிரான மூன்று நாள் மாநாட்டை சிபிஐ நடத்துகிறது. இதன் தொடக்க விழாவில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக உரை நிகழ்த்தினார்.

அப்போது வாரிசுகள் மூலமாக அரசியல் நடத்தும் கட்சிகள் ஊழலை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வதாக குற்றம் சாட்டினார். பல மாநிலங்களில் வாரிசு அரசியல் தொடர்வதன் மூலம் ஊழல் ஒரு தலைமுறையில் இருந்து இன்னொரு தலைமுறைக்குத் தொடர்வதாக மோடி தெரிவித்தார்.

ஊழலில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்படாமல் விடப்பட்டதால் ஊழல் பல தலைமுறைகளுக்குத் தொடர்வதாகவும் அவர் கூறினார். ஊழலுக்கு எதிராகப் போராடுவது சிபிஐயின் கடமை மட்டுமல்ல நாட்டு மக்கள் அனைவரின் பொறுப்பும் ஆகும்  என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

மக்களுக்கு அரசு மீது நம்பிக்கையை தமது தலைமையிலான பாஜக அரசு மீட்டெடுத்துள்ளதாக தெரிவித்த மோடி பழைய சட்டங்கள் திருத்தப்பட்டு வாழ்க்கை முறை எளிமையாக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments