கருணை அடிப்படையில் வேலை என்பது கோவில் பிரசாதமல்ல: சென்னை உயர்நீதிமன்றம் கருத்து

0 3196
கருணை அடிப்படையில் வேலை என்பது கோவில் பிரசாதமல்ல: சென்னை உயர்நீதிமன்றம் கருத்து

கருணை அடிப்படையில் வேலை வழங்குவது என்பது கோவிலுக்கு வரும் அனைவருக்கும் வழங்கும் பிரசாதமல்ல என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

பி எஸ் என் எல் நிறுவனத்தில் பணியாற்றி உயிரிழந்த கஜேந்திரன் என்பவரது மகள் விஜயபிரசன்னா என்பவர் கருணை அடிப்படையில் பணி வழங்கக் கோரி விண்ணப்பித்தார்.

அவரது விண்ணப்பத்தை பி.எஸ்என்.எல் நிர்வாகம் நிராகரித்தது. இதனை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, தகுதியானவருக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க மறுத்ததன் மூலம் ஊழியரின் குடும்பத்தை ஏழ்மை நிலைக்கு தள்ளிவிட்டதாக நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

மூன்று மாதங்களில் விஜய பிரசன்னாவுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்குவது குறித்து முடிவெடுக்க வேண்டும் என்றும் பி எஸ் என் எல் நிறுவனத்துக்கு உத்தரவிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments