காணொலி வழக்கு விசாரணைக்கு சட்டையில்லாமல் ஆஜரான வழக்கறிஞர்: நீதிபதிகள் கடும் கண்டனம்

0 1670
காணொலி வழக்கு விசாரணைக்கு சட்டையில்லாமல் ஆஜரான வழக்கறிஞர்: நீதிபதிகள் கடும் கண்டனம்

உச்சநீதிமன்றத்தின் வழக்கு விசாரணைக்கு வழக்கறிஞர் ஒருவர் சட்டையில்லாமல் காணொலியில் ஆஜரானது குறித்து கடும் அதிர்ச்சி தெரிவித்துள்ள நீதிபதிகள், அது மன்னிக்க முடியாத செயல் எனக் கூறியுள்ளனர்.

சுதர்சன் என்ற தொலைக்காட்சி மதவாதத்தை தூண்டும் நிகழ்ச்சியை ஒளிபரப்பியது தொடர்பான வழக்கை, நீதிபதி சந்திரசூட் அமர்வு விசாரித்துள்ளது. அப்போது OpIndia என்ற இணைய தளத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சட்டையில்லாமல் ஆஜராகியுள்ளார்.

அதிர்ச்சியான நீதிபதிகள் யார் அது என்று கேட்டபோது, பதில் சொல்லாமல் லாக்அவுட் செய்துள்ளார். இது மன்னிக்க முடியாத செயல் என அமர்வில் இடம்பெற்றிருந்த நீதிபதி இந்து மல்ஹோத்ரா கூறியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments