"ஹர ஹர மகாதேவா" முழக்கத்துடன் கைலாஷ் மலைத்தொடரை கைப்பற்றிய இந்தியா

0 24312
"ஹர ஹர மகாதேவா" முழக்கத்துடன் கைலாஷ் மலைத்தொடரை கைப்பற்றிய இந்தியா

சீனாவுடனான 1962ஆம் ஆண்டு போருக்கு முன்னர், இந்தியா வசமிருந்த கைலாஷ் மலைத்தொடர் பகுதி, மீண்டும் நமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம், கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு ஆண்டுதோறும் தடை ஏற்படுத்தி வந்த சீன ராணுவத்திற்கு இந்திய ராணுவம் அதிர்ச்சி வைத்தியம் அளித்தது.

கைலாய மலைத்தொடரில், மிக உயர்ந்த சிகரத்தை கொண்டுள்ள கைலாய மலையும், அதன் அருகே அமைந்துள்ள மானசரோவர் ஏரியும் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தில் உள்ளன. இந்து ஆன்மீக மரபில், கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு தனி முக்கியத்துவம் உண்டு.

1962ஆம் ஆண்டு போருக்கு முன்னர், கைலாஷ் மானசரோவர் செல்லும் யாத்ரீகர்கள், லடாக்கில் உள்ள டெம்சோக் பகுதியில் இருந்து புறப்படுவதை வழக்கமாக வைத்திருந்தனர். 1962ஆம் ஆண்டு போருக்குப் பிறகு, இந்த வழித்தடத்தை சட்ட விரோதமாக கைப்பற்றிய சீனா, கைலாஷ் மானசரோவருக்கான பாதையை மூடிவிட்டது. 

இந்நிலையில் கிழக்கு லடாக் எல்லை மோதலின் தொடர்ச்சியாக, ஆகஸ்ட் 29 மற்றும் 30ஆம் தேதிகளில் கைலாஷ் மலைத்தொடரின் முக்கிய பகுதியை இந்திய ராணுவம் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தது.

ஆகஸ்ட் 29ஆம் தேதி இரவு, பாங்காங்சோ ஏரியின் தென்முனையில் தாக்குங் சிகரத்தில் ஊடுருவ முயன்ற சீன வீரர்களை பின்வாங்கச் செய்த இந்திய வீரர்கள், அனைத்து முக்கிய சிகரங்களையும் கைப்பற்றினர். இந்திய வீரர்கள் "ஹர ஹர மகாதேவா" என்று முழக்கமிட்டபடியே, இந்த மலைச் சிகரங்களை ஒவ்வொன்றாகக் கைப்பற்றியுள்ளனர்.

அந்த வகையில் கைலாஷ் மலைத்தொடரில் அமைந்துள்ள வியூக முக்கியத்துவம் வாய்ந்த 6 சிகரங்களை இந்திய ராணுவம் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளது.இந்த பகுதிகளின் மீது கண்வைத்தே, ஒவ்வொரு ஆண்டும் கைலாஷ் மானசரோவர் யாத்திரையை நிறுத்தப்போவதாக சீனா அச்சுறுத்தி வந்த நிலையில், கைலாஷ் மலைத்தொடர் பகுதியை இந்திய ராணுவம் கைப்பற்றி, சீன ராணுவத்திற்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

தற்போது எந்த விலை கொடுத்தும் கைலாஷ் மலைத்தொடரை கைப்பற்றிவிட சீனா துடிக்கிறது. அதனால் இந்திய முன்கள நிலைகள் அருகே சீன வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம், இந்த மலைகளை மீண்டும் காலி செய்வது வெளியேறுவது சரியல்ல என இந்திய ராணுவமும் உணர்ந்துள்ளது. இதனால்தான் இரு தரப்பும் ஆயிரக் கணக்கான வீரர்களை, சுடும் தூரத்தில் குவித்துள்ளதோடு, டாங்குகள், பீரங்கிகள், ராக்கெட் லாஞ்சர்கள், கண்காணிப்பு ட்ரோன்கள் என களமிறங்கியுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments