சென்னை தனியார் நட்சத்திர ஓட்டலில் அரசு மருத்துவ கல்லூரி மாணவர் மர்ம மரணம்

0 7632
சென்னை தனியார் நட்சத்திர ஓட்டலில் அரசு மருத்துவ கல்லூரி மாணவர் மர்ம மரணம்

சென்னை தனியார் நட்சத்திர ஓட்டல் அறையில் மருத்துவ மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் மாவட்டம் வனவாசியை சேர்ந்த 25 வயதான மருத்துவர் லோகேஷ் குமார், அரசு மருத்துவ கல்லூரியில் முதலாமாண்டு முதுநிலை மருத்துவம் படித்து வந்தார். ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கொரோனா பிரிவில் பணிபுரிந்த நிலையில், தியாகராயநகரிலுள்ள ஜிஆர்டி கிராண்ட் ஓட்டல் அறையில் சுயதனிமைபடுத்தி கொண்டிருந்தார்.

நேற்று தொலைபேசியை எடுக்காததால் இன்னொரு சாவியை கொண்டு நிர்வாகத்தினர் அறையை திறந்தபோது ரத்த வாந்தி எடுத்த நிலையில் அவர் சடலமாக கிடந்துள்ளார். சந்தேகமான முறையில் இறந்து கிடந்ததாக என்ற அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments