நாடு முழுவதும் 3 லட்சம் சிறு வியாபாரிகளுக்கு கடனுதவி வழங்கும் திட்டம்.. பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்

0 1770
நாடு முழுவதும் 3 லட்சம் சிறு வியாபாரிகளுக்கு கடனுதவி வழங்கும் திட்டம்.. பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்

3 லட்சம் தெருவோர வியாபாரிகளுக்கான சிறப்புக் கடன் திட்டத்தை பிரதமர் மோடி காணொலியில் துவக்கி வைத்தார். இதன்படி குறைந்த வட்டி விகிதத்தில் 10 ஆயிரம் ரூபாய் கடன்பெற்று தெருவோர சிறு வியாபாரிகள் தங்கள் தொழிலை மேம்படுத்த இயலும்.

இதுவரை இந்த கடனை பெற 24 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். கடன் திட்டத்தை ஆக்ரா, வாரணாசி மற்றும் லக்னோவில் துவக்கி வைத்த மோடி, பயனாளிகளான தெருவோர வியாபாரிகளிடம் பேசி அவர்களின் தொழில் நன்றாகப் போகிறதா? எத்தனை அதிகாரிகள் இந்த திட்டத்திற்காக உங்களை வந்து பார்த்தனர்? தினமும் எவ்வளவு சம்பாதிக்கிறீர்கள் உள்ளிட்ட கேள்விகளை எழுப்பினார்.

இந்த கேள்விகளை எழுப்பினாலும் தாம் வருமான வரித் துறை அதிகாரி ஒன்றுமில்லை என அவர் வேடிக்கையாகவும் மோடி குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments