ஹரியானா : கல்லூரி மாணவியை பட்டப்பகலில் சுட்டுக் கொன்ற காட்சி : தப்பியோடிய நபர் சில மணி நேரத்தில் போலீசாரால் கைது

0 2535

ஹரியானாவில் பட்டப்பகலில் கல்லூரி மாணவி ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்படும் பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

பல்லப்கரிலுள்ள கல்லூரியில் மாணவி நிகிதா தோமர் தேர்வு எழுதிவிட்டு நேற்று வெளியே நின்று கொண்டிருந்தார். காரில் வந்த 2 பேரில் ஒருவர், நிகிதாவை கட்டாயபடுத்தி உள்ளே இழுக்க முயற்சித்தான். பிடிபடாமல் நிகிதா ஓடவே ஆத்திரமடைந்த நபர்,துப்பாக்கியில் சுட்டுவிட்டு தப்பி சென்றான்.

தப்பியோடிய 2 பேரும் மாணவிக்கு ஏற்கெனவே அறிமுகமான தவ்சீப், ரேகான் என்பதை கண்டுபிடித்து போலீசார் கைது செய்தனர். நிகிதாவை காதலித்து வந்த தவ்சீப் திருமணத்திற்காக அவர மதம் மாறச் சொன்னதாகவும் அதற்கு நிகிதா மறுத்ததால் கொலை செய்யப்பட்டுள்ளதாக நிகிதா சகோதரர் குற்றம்சாட்டியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments