"பயிர்க்கழிவுகள் எரிப்பதை தடுக்க புதிய சட்டம்"- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

0 447
"பயிர்க்கழிவுகள் எரிப்பதை தடுக்க புதிய சட்டம்"- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ள நிலையில், சுற்றுவட்டாரங்களில் பயிர்க்கழிவுகள் எரிப்பதை தடுக்க புதிய சட்டம் கொண்டுவரப்படும் என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தபோது வாதிட்ட சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இந்த வார இறுதிக்குள் பயிர்க்கழிவுகள் எரிப்பதை தடுப்பதற்கான ஒரு அவசரச் சட்டம் தயாராக இருக்கும் என தெரிவித்தார்.

இது தொடர்பாக பேசிய மத்திய வேளாண்துறை செயலாளர் ஆர்.பி.குப்தா, டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காற்று மாசுபாட்டை குறைப்பதற்கான நடவடிக்கைகள் இந்த புதிய சட்டத்தில் இடம்பெறும் என தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments