சென்னையில் 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது.. கட்டிடத்தில் யாரும் இல்லை என்பதால் அசம்பாவிதம் ஏதும் நிகழவில்லை

0 2825
சென்னையில் 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது.. கட்டிடத்தில் யாரும் இல்லை என்பதால் அசம்பாவிதம் ஏதும் நிகழவில்லை

சென்னை ராயப்பேட்டையில் 5 மாடி பழைய கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது.

காங்கிரஸ் முன்னாள் எம்பி ஜே எம் ஆருணுக்கு சொந்தமான இந்த கட்டிடத்தில் இருந்த வாடகைதாரர்கள் 12 பேர் ஏற்கனவே காலி செய்து விட்டனர். ஒரு பெண் மட்டும் வீட்டை காலி செய்ய மறுத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

இந்த நிலையில் திடீரென அந்த கட்டிடம் முழுவதும் இடிந்து விழுந்தது. அப்போது அந்த பெண்ணின் குடும்பத்தினர் யாரும் அங்கு இல்லாததால் உயிர் தப்பினர்.

பழமையான கட்டிடம் முறையான பராமரிப்பின்றி இயங்கி வந்ததே விபத்துக்கு காரணம் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments