ஐபிஎல்: கொல்கத்தா அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில், பஞ்சாப் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி

0 1468
ஐபிஎல்: கொல்கத்தா அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில், பஞ்சாப் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில், பஞ்சாப் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி, 10 ரன்களை சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

பொறுப்புடன் ஆடிய சுப்மன் கில் 57 ரன்களையும், கேப்டன் மார்கன் 40 ரன்களையும் சேர்த்தனர். 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 149 ரன்களை சேர்த்தது.

இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணியில் அதிரடியாக ஆடிய கெயில் 51 ரன்களை குவித்தார். மந்தீப் சிங் 66 ரன்களை சேர்க்க, பஞ்சாப் அணி 18.5 ஓவர்கள் முடிவில் இலக்கை எட்டி, புள்ளிப் பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments