கேரள தங்கக் கடத்தல் வழக்கில் தேடப்பட்ட முக்கிய குற்றவாளி கைது

0 1182

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான ரபீன்ஸ் ஹமீதை, தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்துள்ளனர்.

துபாயில் இருந்து என்ஐஏ அதிகாரிகள் குழு அவரை விமானம் மூலம் அழைத்து வந்த நிலையில், கொச்சி விமான நிலையத்தில் வைத்து விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

கடந்த ஜூலை மாதம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில், துபாயில் இருந்து கடத்திவரப்பட்ட15 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில், தங்கக் கடத்தலுக்கு நிதி திரட்டி குற்றத்திற்கு மூளையாக செயல்பட்டதாக ரபீன்ஸ் ஹமீது கைது செய்யப்பட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments